முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Published Date: June 25, 2025

CATEGORY: CONSTITUENCY

மதுரை அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் குறித்து அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாட்டின் முன்னோடி திட்டமாக விளங்கி வருகிறது. இந்தத் திட்டத்தை மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 2022 செப்டம்பர் 15 தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக மதுரை மாநகராட்சி 26 தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2686 மாணவ மாணவிகள் பயம் பெற்று வருகின்னர். இத்திட்டம் மேலும் இரண்டாம் மூன்றாம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு மொத்தம் 73 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மொத்தம் 7 ஆயிரத்து 197 மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்

மதுரை மாநகராட்சியின் பள்ளிகள் மட்டும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவிகளுக்கு உணவு வழங்கும் பணியில் 126 தன்னார்வலர்கள்  ஈடுபட்டு வருவதுடன் இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் மாதம் ரூபாய் 1500 மதிப்பூதியமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மேல வாசல் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மதுரை முத்துப்பட்டியில் உள்ள அரசு கன்னர் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இந்த காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்தார்.

மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா விஜயன் முன்னிலை வகித்தனர். பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவாக ஆய்வு செய்த அமைச்சர் மாணவர்களின் வருகை பதிவேடு, காலை உணவு திட்ட பதிவேடு உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். தொடர்ந்து மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்தத் திட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளை தவிர்த்து மற்ற வகுப்பிலான ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பயனடையும் வகையில் கூடுதலாக இந்த திட்டத்தில் 1350 பேருக்கு தனியார் சமூக பங்களிப்பின் மூலம் காலை உணவு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் நாகராஜன், மண்டல தலைவர் பாண்டி செல்வி சுவிதா, கல்விக் குழு தலைவர் ரவிச்சந்திரன், உதவி கமிஷனர் பார்த்தசாரதி கல்வி அலுவலர் ஜெயசங்கர் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Media: Dinakaran